காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது
கொரோனா வைரஸை தடுப்பதற்காகவே நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே வாங்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் என்று சொல்லப்படும் காய்கறி உள்ளிட்டவை அதிக விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கு தமிழக அரசு தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், இம்மாதிரியான சூழ்நிலையில் லாபத்தை கணக்கில் கொண்டு, காய்கறிகளை அதிக விலைக்கு விற்ககூடாது. மீறினால் உரிமம் ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளது.