Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” 7 பேர்…. மரக்கிளையில் தனிமை….!!

மேற்கு வங்கத்தில் 7 தொழிலாளர்கள் தங்களைத்தாங்களே மரக்கிளையில் தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதைத் தவிர தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. இதை முன்கூட்டியே அறிந்த சென்னையில் பணிபுரிந்த ஏழு மேற்குவங்க தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த சுகாதார மருத்துவர்கள் உங்களை நீங்களே சுய தனிமைப் படுத்திக் கொள்ளுதல் நல்லது என்று தெரிவித்ததையடுத்து வீட்டிற்கு செல்லாமல் சாலையோரத்தில் உள்ள மரக்கிளையில் பலகை அமைத்து தங்களைத் தனிமைப் படுத்தி உள்ளனர். இதற்கான காரணமாக அவர்கள் கூறியதாவது, எங்கள் வீடு மிக சிறியது. இடைவெளிக்கு வாய்ப்பில்லை. எங்களால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்பட நாங்கள் விரும்பவில்லை ஆகையால் இம்முறையைக் கையாண்டு உள்ளோம் என்று தெரிவித்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |