Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வைரஸின் தாக்கம் வேண்டாம்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…!!

வைரஸ் நோய் தொற்றாமல் தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கையான வழிமுறைகள் பற்றிய தொகுப்பு

நாட்கள் போகப்போக கொரோனாவின் தாக்கம் அதிகம் ஆகும் நிலையில் நமது உடல் நிலையை நாமே தற்காத்துக் கொள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் தான் இதுநாள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களை நோய் எளிதில் தாக்குவதில்லை. இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த சில குறிப்புகள். அவை

  • ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு சுக்குப் பொடி சிறிது துளசி இலை மற்றும் ஒரு ஸ்பூன் மல்லி சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து அதனை வடி கட்டி அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • ஒரு டம்ளர் பாலுக்கு நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து 4 பூண்டு பற்களையும் சேர்த்து நன்றாக வற்றும் வரை சுண்டக்காய்ச்சி வடிகட்டி டீ காப்பிக்கு பதில் இதனை அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
  • ஒரு லிட்டர் மோரில் 2 டீஸ்பூன் மஞ்சள் பொடி, 2 டீஸ்பூன் பெருங்காயப் பொடி, 2 டீஸ்பூன் சோம்பு, 2 டீஸ்பூன் வெந்தயம் மற்றும் கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து அடிக்கடி அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
  • மோரில் கருவேப்பிலையை நன்றாக அரைத்து கலந்து குடித்து வருவதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • பாலில் ஐந்து மிளகு மற்றும் ஒரு வெத்தலை சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டி அருந்தி வருவதனால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.
  • வைரஸ் நோய் பரவிவரும் இந்த நேரத்தில் எலுமிச்சை பழத்தில் ஜூஸ் தயார் செய்து அருந்திவருவது நன்மையை கொடுக்கும்.
  • இஞ்சி, மஞ்சள், சின்ன உள்ளி, பூண்டு இவை நான்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய அத்தியாவசிய பொருட்கள். இதனை அன்றாட உணவு பொருட்களில் சேர்ப்பது நல்லது.

Categories

Tech |