மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200யை நெருக்குகின்றது.
கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 86 பேர் குணமடைந்துள்ளனர். 879 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை 25ஆக அதிகரித்திருந்தது. கொரோனா தொற்றால் அதிகப்பட்சமாக மஹாராஷ்டிராவில் 193 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பதித்தவர்கள் எண்ணிக்கை 196ஆக அதிகரித்துள்ளது. 25 பேர் குணமடைந்துள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக கேரளாவிலும் , கர்நாடகாவிலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.