Categories
இந்திய சினிமா சினிமா

ஊரடங்கு உத்தரவு.. பரிதவிக்கும் தெரு நாய்களுக்கு உணவளித்து வரும் நடிகை.!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நிலையில் தெருக்களில் உணவின்றி தவிக்கும் நாய்களுக்கு நடிகை ஒருவர் உணவு அளிக்கிறார்.

உலகில் ஒவ்வொரு நாட்டையும் உலுக்கி எடுத்துவிட்டு இப்பொழுது இந்தியாவிற்கு பரவிய கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். அதேபோல்தான்  திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறை சேர்ந்த பிரபலங்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கன்னட திரைப்பட நடிகை சம்யுக்தா ஒரநாடு, ஊரடங்கால் உணவு இல்லாமல் பரிதவிக்கும் தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார். இது தொடர்பாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சம்யுக்தா வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் ஊரடங்கை ஒட்டி ஒரு வாரமாக நாய்கள் யாவும்  உணவு இன்றி போராடி வருவதைக் கண்டு என் மனம் நொறுங்குகிறது. நான் உள்பட சிலர் சேர்ந்து தெருநாய்களை கண்டறிந்து உணவளித்து வருகிறோம்.

 

இதற்கு உதவியாக இருக்கும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு நன்றி என்று கூறியுள்ளார். அவரின் கருணை உள்ளம் கொண்ட இந்த செயலை அனைவரும் பாராட்டி உள்ளனர்.

 

Categories

Tech |