Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மாசம் 10,000 ரூபாய்….! ”3 மாசம் 30,000 ரூபாய் கொடுங்க” – எச்.ராஜா வேண்டுகோள் ….!!

ஊரடங்கால் வேலையில்லாமல் இருக்கும் பூசாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா வேண்டுகோள் வைத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகத்திலும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள்  வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.இவர்களுக்கு இழப்பீடாக தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ 1000, அரசி, பருப்பு, எண்ணெய் வழங்கப்படும் என அறிவித்தது.

அதே போல தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபட்டு தளமும் மூடப்பட்டுள்ளதால் கோவில் பூசாரிகளும் கோவிலுக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதால் அவர்களுக்கு மாதம் 10,000 வீதம் 3 மதத்திற்கு 30,000 வழங்க வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள், ஓதுவார், இசை கலைஞர்கள், ஆகியோருக்கு மாதம் 10000 ரூபாய் வரும் 3 மாதங்களுக்கு அறநிலையத்துறை வழங்கிட வேண்டும். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |