டெஸ்லா (Tesla) நிறுவனம் தமது புது விதமான உயர் ரக கார்களுக்கான விலையை உயத்தப் போவதாக அறிவித்துள்ளது.
டெஸ்லா நிறுவன தலைமைச் செயலதிகாரி எலன் மஸ்க், மாடல் 3 என்ற கார்களை 35 ஆயிரம் டாலர்களுக்கு விற்பதற்கு திட்டமிட்டு இருப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், டெஸ்லா நிறுவன தலைமைச் செயலதிகாரி எலன் மஸ்க், முன்பு திட்டமிட்டதை விட குறைவான கார் விற்பனையகங்களை மட்டுமே மூட உள்ளதாகவும், அதிக விற்பனை நடைபெறும் நகரங்களில் குறைந்த பணிகுழுவோடு விற்பனையகங்களை மீண்டும் செயல்படுத்தவுள்ளதாகவும் டெஸ்லா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாடல் 3, மாடல் S, மாடல் X போன்ற விதமானஉயர் ரக கார்களுக்கு சராசரியாக 3 சதவீத விலையை அதிகரிக்க உள்ளதாகவும் டெஸ்லா நிறுவனம் தரப்பில் நேற்று அறிவித்துள்ளது.