Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ நடவடிக்கை ….!!

வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் தமிழகத்தில் சிக்கி தவிக்கின்ற நிலையில் வெளிமாநில தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட இரண்டு குழு அமைக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான இருப்பிட வசதி, உணவு வசதி, மருத்துவ வசதியை வேலை பார்த்த நிறுவனங்கள் உறுதி படுத்த வேண்டும். இதனை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வெளிமாநில தொழிலாளர்கள், வெளிமாநில மாணவர்கள் தங்கியுள்ள இருப்பிடத்தை நேரியாக ஆய்வு செய்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் கண்காணிக்கவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 2 குழுக்கள்  கூடுதலாக அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |