Categories
சினிமா தமிழ் சினிமா

பரவை முனியம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது!

மூச்சுத்திணறல் காரணமாக மறைந்த நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் பரவை பகுதியைச் சேர்ந்தவர் 76 வயதான பரவை முனியம்மா. நாட்டுப்புறப் பாடல்கள் பாடிவந்த இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான  ‘தூள்’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் வந்தன. இதுவரை இவர் 25 படங்களில் நடித்துள்ளார்.

பிரபல கிராமிய பாடகியும், நடிகையுமான ...

இந்த சூழலில் பரவை முனியம்மா கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் உடல்நலக் குறைவால் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் இவ்வுலகை விட்டு மறைந்தார். பரவை முனியம்மாவின் மறைவு குறித்து திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Image
இதனையடுத்து பரவை முனியம்மாவின் உடல் அவரது சொந்த ஊரான பரவையில் இருக்கும் சுடுகாட்டில் சடங்குகள் செய்யப்பட்டு இன்று எரியூட்டப்பட்டது. நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக முனியம்மாவின் இறுதி சடங்கில் நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் நடிகர் அபி சரவணன் உள்ளிட்ட சிலரே கலந்துக்கொண்டனர்.

Categories

Tech |