வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் வகையில் டெல்லி அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா தடுப்பு நடிகையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாட்டில் ஊரடங்கு அமுலில் இருக்கின்றது. இதனால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அனைத்து தொழிற்சாலைகளும் நிறுத்தப்பட்டன. அத்தியாவசிய சேவைக்கான நடவடிக்கைகள் மட்டும் நடைபெற வேண்டுமென்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால் டெல்லி பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் சிக்கி தவித்தனர்.
ஆயிரக்கணக்கான உத்தரபிரதேச தொழிலாளர்கள் நடந்து சென்று ஒரு இடத்தில் கூடினர். இதனால் கொரோனா சமூக தொற்றாக மாறி விடுமோ என்ற அச்சம் எழுந்ததையடுத்து அவர்கள் அனைவருக்கும் சிறப்பு பேருந்து மூலமாக உத்தரப்பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், வெளியூர்களிலிருந்து டெல்லியில் தங்கியிருக்கக் கூடிய தொழிலாளர்கள் யாரும் அந்த சொந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம். இங்கே இருக்கக்கூடிய விளையாட்டு மைதானங்கள், பள்ளிக்கூடங்களை காலி செய்து தங்க இடம் அமைத்துக் கொடுக்கப்படும்.
உங்களுக்கு தேவையான உணவு, மருந்துகள், தண்ணீர் ஆகிய அனைத்தும் கொடுக்கப்படும். தொழிலாளர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் ஒரு நாளைக்கு 4 லட்சம் பேருக்கு உணவு வழங்க கூடிய திட்டத்தை அவர் அறிமுகம் செய்தார். இன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் பலருக்கும் உணவு வழங்கப்பட்டு வருகின்றது.