Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

1 வாரத்தில் 600 பேர் பாதிப்பு…. 1024 பேரை தாக்கிய கொடூர கொரோனா ….!!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.03) அன்று 499 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 34 பேர் குணமடைந்து 10 பேர் உயிரிழந்துள்ளனர். இருந்த எண்ணிக்கை  தற்போது ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரே வாரத்தில் 600க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு தற்போது 1024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதில் 96 பேர் குணமடைந்து, 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 186 பேரும், கேரளாவில் 182 பேரும் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரத்தை ஒப்பிடும்போது மிக வேகமாக இந்த வைரஸ் பரவி வருகின்றது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்ட்டுள்ளதால் இந்தியா உடனடியாக இதனை கட்டுப்படுத்த வேண்டிய கட்டத்தில் இருக்கின்றது என்பதை மொத்த எண்ணிக்கை உணர்த்துகின்றது.

Categories

Tech |