Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு.. மன அமைதி குறையும்.. இடையூறுகளை சரி செய்யுங்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் தன்மான குணத்திற்கு சோதனை கொஞ்சம் வரலாம். மன அமைதியை கெடுக்கும் படியான சூழல் கொஞ்சம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை சரிசெய்யவேண்டும். மிதமான பணவரவு தான் வந்து சேரும். பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஓரளவு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

உறவினர்கள் நண்பர்களின் மூலம் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபார நிலையிலும் நெருக்கடிகள் கொஞ்சம் ஏற்படும், பார்த்துக்கொள்ளுங்கள். பெரிய முதலீடுகள் இப்போதைக்கு ஏதும் வேண்டாம். புதிய முயற்சிகளையும் நீங்கள் செய்யாமல் இருப்பது ரொம்ப நல்லது. எதிலும் சற்று சிந்தித்து செயல்படுங்கள் அது போதும். வெளிவட்டார பழக்க வழக்கங்களைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிர்ஷ்டநிறம்: பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |