விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சமூக பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். நிலுவைப்பணம் சிறக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியில் செல்லக்கூடும். குடும்பத்தில் தேவை குறைவின்றி நிறைவேற்றுவீர்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது வந்து செல்லும். எதையும் பேசி தீர்த்துக் கொள்வது ரொம்ப நல்லது.
தொழில் வியாபார நிலையில் அதிகமான போட்டிகளால் லாபம் குறையக்கூடும். சில நேரங்களில் மனம் வருந்தும் படியான செயல்களும் நிறைவேறும். கூட்டாளிகளிடம் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு அபிவிருத்தி குறையும். தயவுசெய்து இன்று உடல்நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். சரியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு, பச்சைநிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெளிர் மஞ்சள்