Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. தெய்வ நம்பிக்கையுடன் செய்லபடுங்கள்.. உடல்நலனில் அக்கறையுடன் இருங்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே..! பிறரிடம் குடும்ப விஷயத்தை பற்றி பேச வேண்டாம். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவது நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் சிரமம் ஓரளவு குறையும். மிதமான பணவரவு தான் வந்து சேரும். இன்று பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாக கூடும். சீரான ஓய்வு உடல் நலனை பாதுகாக்கும். உடல்நலத்தில் கொஞ்சம் அக்கறையுடன்  இருங்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் கொஞ்சம் ஏற்படும், பார்த்துக்கொள்ளுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது உத்தமம்.

பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பெண்களுக்கு திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் கொஞ்சம் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு இன்று இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை இல்லத்தில் வழிவிடுங்கள் உங்களுடைய காரியங்களும் உங்களுடைய மனதும் இன்று அமைதியாகவே சிறப்பானதாகவும் இருக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |