மிதுனம் ராசி அன்பர்களே..! சிலர் உங்களிடம் உதவி கேட்டு வரக்கூடும். இயன்ற அளவில் உதவிகளை புரிந்து நல்ல பெயரை எடுப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்து கடுமையாக உழைப்பீர்கள். நிலுவைப்பணம் விடாமுயற்சியால் மட்டுமே கிடைக்கும். வெளியூர் பயணத்தை கொஞ்சம் தள்ளிப் போடுவது ரொம்ப நல்லது. புதிய முயற்சிகளில் தயவுசெய்து தள்ளிப்போடுவது ரொம்ப நல்லது. இன்று ஓரளவு கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடும் நாளாகவும் இருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையில் மனம்விட்டு எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்துமே ரொம்ப சிறப்பை கொடுக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெறுவதற்கு தாமதமான நிலைதான் ஏற்படும். வேலை பளு அதிகரிப்பதால் அதிக நேரம் கொஞ்சம் உழைக்க வேண்டியிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். இன்றைய நாள் கொஞ்சம் சிறப்பாகவே இருக்கும். முடிந்தால் இன்று இல்லத்தில் ஆலய வழிபாட்டை மேற்கொண்டு பின்னர் காரியங்களில் ஈடுபடுங்கள் சிறப்பாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்வது ரொம்ப நல்லது, ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்