Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 30.03.2020 ) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!!

இன்றைய பஞ்சாங்கம்

30-03-2020, பங்குனி 17, திங்கட்கிழமை,

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00,

இன்றைய ராசிப்பலன் –  30.03.2020

மேஷம் ராசிக்கு..

இன்று மனதில் வீண் குழப்பங்கள் உண்டாகலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை கொஞ்சம் அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைய கூடும்.

ரிஷபம் ராசிக்கு..

இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எந்த விஷயத்திலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுபகாரியங்களுக்கான எடுத்த முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

மிதுனம் ராசிக்கு..

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

கடகம் ராசிக்கு..

இன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கடன்கள் ஓரளவு குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலைப்பளு குறையும்.

சிம்மம் ராசிக்கு..

இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசிக்கு..

இன்று நீங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணிமாற்றம், இடமாற்றம் பற்றி யோசிப்பார்கள். சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய கருவிகள் வாங்க நினைப்பீர்கள், அது வெற்றியாகவே முடியும்.

துலாம் ராசிக்கு..

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்த்திடுங்கள், ரொம்ப நல்லது.   பயணங்கள் செல்லும்பொழுது கவனம் இருக்கட்டும்.

விருச்சிகம் ராசிக்கு..

இன்று மன அமைதியும், மகிழ்ச்சியும் உங்கள் மனதில் உண்டாகும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறி முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலமான பலனே கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு ராசிக்கு..

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திழதுழழந்ந்ருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோக சம்மந்தமாக இன்று சிலர் வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமைய கூடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். இறை வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம் ராசிக்கு..

இன்று பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்லுங்கள், ரொம்ப நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது உத்தமம். உடன் பிறந்தவர்கள் இன்று உங்களுக்கு உறுதுணை புரிவார்கள்.

கும்பம் ராசிக்கு..

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் அதிகம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் செல்லும்.

மீனம் ராசிக்கு..

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் நல்ல பலனே கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும்  பூர்த்தியாகும்.

Categories

Tech |