உலகளவில் கொரோனா உயிரிழப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,956 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது. இதுவரை கொரோனோவால் 7,21,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் ஒரே நாளில் 756 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,778 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சீனா – 81,439, ஸ்பெயின் – 80,110, ஜெர்மனி – 62,095, பிரான்ஸ் – 40,174, ஈரான் – 38,309, பிரிட்டன் – 19, 922, சிங்கப்பூர் – 844, பாகிஸ்தான் – 1,597, இலங்கை – 117, அமெரிக்கா – 1,31,403, சுவிஸ் – 14,829 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக இத்தாலியில் 10,799 பேரும், ஸ்பெயினில் 6,606 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 1,48,447 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 1144 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை கொரோனா பாதிப்பால் 28 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 102 பேர் குணமடைந்துள்ளனர்.