கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து இருக்கின்றனர். இந்த வைரஸ் நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து கொண்டே வருகிறது. இதுவரை சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டும், 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவிலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது.
குருணால் பாண்டியா தனது ட்விட்டர் பதிவில், நாங்கள் அனைவரும் வீட்டிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறோம், தயவு செய்து நீங்கள் அனைவரும் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் வீட்டில் இருங்கள் என்று பதிவிட்டு, வீடியோவையும் இணைத்துள்ளார்.
அந்த வீடியோவில், பாண்டியா சகோதரர்கள் இணைந்து குடும்பத்தோடு வீட்டிற்குள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். அண்ணன் குருணால் பாண்டியா பேட்டிங் செய்ய தம்பி ஹர்திக் பந்து வீசுகிறார். சிறிது நேரத்தில், இருவரும் இணைந்து பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருங்கள் என்றும், கொரோனாவை நாம் இணைந்து விரட்டுவோம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
We can have fun indoors too 😊 Please stay home and be safe everyone 🤗 @hardikpandya7 pic.twitter.com/bje9m5n99j
— Krunal Pandya (@krunalpandya24) March 29, 2020