Categories
சற்றுமுன் புதுச்சேரி

கிருமி நாசினியை அடித்துக்கொண்டே சட்டப்பேரவைக்குள் வந்த அதிமுகவினர் ….!!

புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் நிதி தாமதமாக கிடைக்கும் என்பதால் அரசின் செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால் அரசினுடைய அடுத்த மூன்று மாத செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய இன்று காலை புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.

கொரோனா முன்னெச்சரிக்கையாக சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு உறுப்பினர்கள் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தனர். கொரோனாவால் உயிரிழந்த உலக மக்களுக்காகவும், திமுகவின் பொதுச்செயலாளர் கே.அன்பழகன் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து புதுச்சேரி அமைச்சர் முதல் அமைச்சர் நாராயணசாமி அடுத்த மாதம் மூன்று மாத அரசின் செலவிற்கு 2,042 கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

முன்னதாக புதுச்சேரி முழுவதும் கிருமி நாசினி அடிக்கவில்லை என்ற அதிமுகவினர் சட்டப்பேரவைக்குள் கிருமி நாசினி யை அடித்துக்கொண்டே வந்தனர். அப்போது கொரோனா வைரஸ் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்று சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர்.

அப்போது முதல்வர் நாராயணசாமி முற்றுகையிடடுங்கள் ஆனால் சற்று இடைவெளிவிட்டு நில்லுங்கள் என்று தெரிவித்தார். கவன ஈர்ப்பு எடுத்துக்கொள்ளப்படாததால் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Categories

Tech |