Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு : திமுக சார்பில் 1 கோடி நிவாரணம்…. தமிழக அரசிடம் கொடுக்கிறது …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திமுக சார்பில் 1 கோடி நிதி வழங்கப்படும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் ஐந்து பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக முதல்வர் ரூ. 9,000 கோடி  கேட்டு பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தும் வகையில் புதிதாக 530 மருத்துவர்களையும் , 1000 செவிலியர்கள், 1,580 ஆய்வக டெக்கனிஷியன்களை நியமனம் செய்ய உத்தரவிட்ட முதலவர் 200 புதிய ஆம்புலன்ஸ்களையும் வாங்க பரிந்துரை செய்தார். மேலும் 15,000 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா அவசர சிகிச்சை பிரிவு ஏறப்டுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீவிரமாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதி மனமுவந்து தங்கள் பங்களிப்பினை பொதுமக்கள் அளிக்கலாம் என்ற கோரிக்கையை முதல்வர் வைத்திருந்த நிலையில் பலரும் முதல்வரின் பொதுநிவரான நிதிக்கு உதவி செய்து வருகின்றனர்.

அந்தவகையில் திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பாக இந்த நிதி வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Categories

Tech |