Categories
கிரிக்கெட் விளையாட்டு

குழந்தைகளுடன் உடற்பயிற்சி செய்யும் முன்னாள் ஃபீல்டிங் ஜம்பவான்!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானான ஜான்டி ரோட்ஸ் வீட்டில் தனது குடும்பத்தினருடன் இணைந்து உடற்பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

கொரோனா வைரஸ் அச்சத்தால் உலக நாடுகள் பல உறைந்து கிடக்கிறது. இந்த வைரஸில் இருந்து தப்பிக்க கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலக நாடுகள் பல ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. இதற்கு கட்டுப்பட்டு உலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.

அந்தவரிசையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஃபீல்டிங் ஜம்பவானான ஜான்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் சுயத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில் ரோட்ஸ், தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை  அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ரோட்ஸ் கூறியதாவது, “தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் நமது உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். எனவே தான் நான் வீட்டில் என்னுடைய குழந்தைகளுடன் ஒரு உடற்பயிற்சி நிலையத்தை உருவாக்கியுள்ளேன். இதனால் நாங்கள் எங்கள் உடல்நலனைப் பாதுகாப்பதுடன், நேரத்தையும் உடற்பயிற்சிக்காகச் செலவிட்டுவருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |