Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா…. முதல்வர் பேட்டியால் அதிர்ச்சி …!!

தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.

 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினருடன் முதலவர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்ததால் இதன் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |