உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது. இதுவரை கொரோனோவால் 7,23,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் ஒரே நாளில் 756 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,778 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் 142,735 பேருக்கும், சீனாவில் 81,470 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினில் 80,110 பேருக்கும், ஜெர்மனியில் 62,435 பேருக்கும், பிரான்ஸில் 40,174 பேருக்கும் ஈரானில் 38,309 பேருக்கும் ஐரோப்பியாவில் 19,522 பேருக்கும், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தாலியில் 10,779 பேரும், ஸ்பெயினில் 6,803 பேரும், சீனாவில் 3,304 பேரும், அமெரிக்காவில் 2,489 பேரும் உயிரிழந்துள்ளனர். ஈரானில் 2,640 பேரும், பிரான்சில் 2,606 பேரும், ஐரோப்பியாவில் 1,228 பேரும் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும்1,51,824 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 1192பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை கொரோனா பாதிப்பால் 29 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 102 பேர் குணமடைந்துள்ளனர்.