குழந்தைகளை ஆரோக்கியமாகவும் நல்ல முறையிலும் வளர்ப்பது அனைத்து பெற்றோர்களின் கடமையாகும் அவ்வாறு ஆரோக்கியமாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில வழிமுறைகள்
- தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.
- குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்கு புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மொபைல் மற்றும் கேமராவில் இருக்கும் ஃபிளாஷ் மூலம் குழந்தைகளின் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.
- குழந்தைகளுக்கு அவ்வப்போது சளி இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையோடு தடுப்பூசி போடுவது அவசியம்.
- குழந்தைகளுக்கு எந்தவித நோய் தொற்றும் ஏற்படாமல் இருக்க அடிக்கடி வீட்டை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்வது அவசியம்.
- கோதுமை, பாதாம், கேழ்வரகு, பிஸ்தா, முந்திரி போன்றவற்றை வறுத்து பொடி செய்து பாலில் கலந்து காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வருவது நன்மை பயக்கும்.
- தோல் நீக்கிய ஆப்பிள் பழங்களை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. ஆப்பிள்பழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு வேகவைத்து மசித்துக் கொடுக்கலாம்.
- குழந்தைகள் இருக்கும் இல்லத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். அல்லது பிராணிகளையும் அதற்கான மருத்துவரிடம் அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
- புதினா எண்ணெயும் தேனும் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வர சளி பிரச்சனைகள் சரியாகும்.
- குழந்தைகளுக்கு வாய்கொப்பளிக்க கற்றுக் கொடுக்கும் பொழுது சுத்தமான தண்ணீரில் கற்றுக்கொடுக்க வேண்டும். தெரியாமல் குழந்தைகள் விழுங்கி விட்டாலும் ஏதும் பிரச்சனை இல்லை.