Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக ஆளுநர் ரூ.2 கோடி நிதியுதவி!

தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக முதல்வர் ரூ. 9,000 கோடி கேட்டு பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் தீவிரமாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதி மனமுவந்து தங்கள் பங்களிப்பினை பொதுமக்கள் அளிக்கலாம் என்ற கோரிக்கையை முதல்வர் வைத்திருந்த நிலையில் பலரும் முதல்வரின் பொதுநிவரான நிதிக்கு உதவி செய்து வருகின்றனர். அந்தவகையில் திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பாக இந்த நிதி வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல டிடிவி தினகரன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணிக்காக தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் மார்க்கெட் சொசைட்டி சார்பில் நிதியுதவி அளித்துள்ளனர். ரூ.50 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் தங்கமணியிடம் வழங்கியுள்ளனர். மேலும் தமிழக ஆளுநர் மத்திய, மாநில அரசுகளுக்கு தலா ரூ. 1 கோடி வீதம் ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

Categories

Tech |