Categories
அரசியல்

கொரோனா நிவாரண நிதி : தமிழக அரசுக்கு ரூ 1,00,00,000 வழங்கினார் டிடிவி தினகரன்!

எம்.எல்.ஏ., டி.டி.வி.தினகரன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து முதலமைச்சரிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கினார்.

தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழகத்திற்கு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக முதல்வர் பழனிசாமி ரூ. 9,000 கோடி  கேட்டு பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் தீவிரமாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மனமுவந்து தங்கள் பங்களிப்பினை பொதுமக்கள் அளிக்கலாம் என்ற கோரிக்கையை முதல்வர் பழனிசாமி வைத்திருந்தார். பலரும் முதல்வரின் பொதுநிவரான நிதிக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமமுக பொது செயலாளரும், எம்.எல்.ஏவுமான டி.டி.வி.தினகரன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து முதலமைச்சரிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கினார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்புப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி மட்டும்) இன்று அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Categories

Tech |