90’ஸ் கிட்ஸ்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான தொலைக்காட்சி தொடர் எதுவென்று கேட்டால் அனைவருமே சற்றும் யோசிக்காமல் படாரென்று சொல்லும் பெயர் ‘சக்திமான்’ தான். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட்மேன் என்று எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் சரி அவர்களின் ஆல்டைம் ஃபேவரைட் ‘சக்திமான்’ என்பதை அடித்து சொல்லலாம். அந்த அளவிற்கு அனைவருக்கும் இந்த தொடர் பிடிக்கும்.
சக்திமான் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கடந்த 1997 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. தற்போது இந்தத் தொடரை மிண்டும் ஒளிப்பரப்ப வேண்டும் என்று சக்திமான் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று மீண்டும் அத்தொலைக்காட்சி சக்திமான் தொடரை ஒளிப்பரப்ப முடிவு செய்திருக்கிறது.
இதுகுறித்து சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில், “130 கோடி இந்தியர்களும் மீண்டும் ஒன்றிணைந்து ‘சக்திமான்’ தொடரை பார்க்க தயாராகுங்கள். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் காத்திருங்கள் ” என்று பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு சக்தி மான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் சக்தி மான் ரசிகர்களாக இருந்தால் பார்த்து ரசிக்க தயாராக இருங்கள்.
130 crore Indians will together get the opportunity to watch Shaktiman on DD once again. Wait for the announcement. pic.twitter.com/MfhtvUZf5y
— Mukesh Khanna (@actmukeshkhanna) March 29, 2020