Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா அதிகம் கொரோனா வைரஸ் பரவக் கூடிய பகுதிகள் குறித்து அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57லிருந்து 67ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. புதிதாக சென்னையில் 5 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனா பரவக் கூடிய பகுதிகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம் பரவக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். மிகவும் அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் . எப்போதும் தங்கள் வீடுகளுக்குள் சுகாதார முகமூடியை அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது

இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியான நிலையில், கொரோனா காரணமாக சென்னையில் ரெட் அலர்ட் எதுவும் விடுக்கப்படவில்லை, மக்கள் அச்சப்பட வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |