Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்: தீ எளிதில் பரவும் இடங்களில் நின்று சானிடைசர் பயன்படுத்தாதீங்க.. மருத்துவர் எச்சரிக்கை

டெல்லியில் நேற்று 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 35% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தீ காயம் ஏற்பட்டது தொடர்பாக மருத்துவர்கள் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், அந்த நபர், சமையல் எரிவாயுவை பயன்படுத்திக்கொண்டிருந்த போது, அதன் அருகாமையில் நின்றபடி தனது துணிகளில் ஹாண்ட் சானிடைசரை தெளித்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது, சானிடைசரில் உள்ள அமிலத்தன்மை காரணமாக அவரது துணியில் தீ பரவியுள்ளது.

இதன் காரணமாக அவரது உடம்பில் 35 சதவிகித தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீரான நிலையில் இருப்பதாக தனியார் மருத்துவமனையின் பிளாஸ்டிக் மற்றும் ஒப்பனை அறுவை சிகிச்சை துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் கொடூரமாக பரவி வருவதை தடுக்கும் வகையில், அடிக்கடி ஹாண்ட் சானிடைசர் கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும் என்றும், முக கவசம் அணிய வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதில், ஆல்கஹாலிக் அடங்கிய சானிடைசர்களை பயன்படுத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆல்கஹாலிக் தன்மை கொண்ட சானிடைசரை பயன்படுத்திய இளைஞருக்கு நேர்ந்த சோகத்தை முகம் வருந்தத்தக்கது. இது தொடர்பாக பேசிய சர் கங்கா மருத்துவமனையின் மருத்துவர் மகேஷ் மங்கல், 62% உயர் எத்தில் ஆல்கஹாலை உள்ளடக்கிய சானிடைசர்கள் எளிதில் தீ பற்ற கூடிய தன்மை கொண்டது. மேலும் இது போன்ற சானிடைசர்களை குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனறும், கைகளில் பயன்படுத்தும் போது அதனை நன்கு உலர வைக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல, தீ அதிகம் பரவும் இடங்களில் நின்று சானிடைசர்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |