மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக இருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அம்மாநிலத்தில் கொரோனா வைரசால் இதுவரை 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 39 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் பலியாகியிருந்தனர்.
இந்த நிலையில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மகாராஷ்டிராவில் மட்டும் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக இந்தியாவில் இதுவரையில் 1071 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 100 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், 30 பேர் பலியாகியுள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.