Categories
பல்சுவை

21 நாள்…. ஆரோக்கியம் அதிகரிக்க…. இஞ்சி..பூண்டு..மிளகு…எதாச்சு ஒன்னு கண்டிப்பா சேர்க்கணும்….!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ,

உணவில் ஏதேனும் ஒரு வகையில், இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், கருஞ்சீரகம், துளசி, எலுமிச்சை, நெல்லி போன்றவற்றில் ஒன்றை அல்லது குறைந்தபட்சம் சேர்த்துக்கொள்வது நல்லது. உதாரணமாக டீயில் இஞ்சி சேர்த்து குடித்தால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். நீரை அதிகமாக அருந்துவது நல்லது. அந்த நீரில் முடிந்தால் எலுமிச்சை சாறு கலந்து அருந்தலாம். எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து குடித்து வருவது உடல் சூட்டை குறைப்பதுடன் எதிர்ப்பு சக்தியை தரும். காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றில் வைட்டமின் சி எது அதிகம் கொண்டுள்ளதோ ?

அவற்றைத் தேடி கண்டுபிடித்து எடுத்துக்கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பதே இந்த தருணங்களில் மிக அவசியம். எப்போதாவது கைகளால் கண், காது, மூக்கு, வாய், ஆசனவாயை தொடும் சூழ்நிலை ஏற்பட்டால் கைகளை 20 நொடிக்கு மேல் சோப்பினால் கழுவுவதை எப்போதும் பின்பற்றுங்கள்.

Categories

Tech |