Categories
தேசிய செய்திகள்

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கும் பதஞ்சலி: யோகா குரு பாபா ராம்தேவ் அறிவிப்பு!

மூலிகை தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ .25 கோடியை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோன தடுப்பு நடவடிக்கைக்காக நிதி வழங்குவதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் என்ற அறக்கட்டளை இந்தியாவில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பிரதமரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.500 கோடி வழங்குவதாக டாடா அறக்கட்டளை அறிவித்தது.

மேலும் டாடா சன்ஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.1,000 கோடி வழங்க முன்வந்தது. இதனை தொடர்ந்து, நடிகர் அக்சய் குமார் சார்பில் ரூ.25 கோடியும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எம்.பி நிதியில் இருந்து ரூ.1 கொடியும் வழங்கினர். இதையடுத்து, துணை ராணுவப்படையை சேர்ந்தவர்கள் தங்களது ஒரு நாள் ஊதியமாக ரூ.116 கொடி காசோலையை கடந்த வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அளித்தனர். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ரெயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி தங்களது ஒரு மாத ஊதிய தொகையை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கினர். இந்த நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் ரூ.50 கோடி நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியது. இதனை தொடர்ந்து, பதஞ்சலி சார்பில் ரூ.25 கோடி பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

Categories

Tech |