தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ,
பூண்டு, நெல்லிக்காய், இஞ்சி போன்றவற்றை நீண்ட காலம் கெடாமல் வைத்திருந்து பயன்படுத்த இயலாத சூழலில் அவற்றை ஊறுகாயாக தயாரித்து பயன்படுத்தி உங்களுடைய உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும். உப்பு, மஞ்சள்தூள் வேப்பிலைச் சாறு சேர்த்த கலவையை கிருமிநாசினியாக வீட்டின் சுற்றுப்புறத்தில் தண்ணீரோடு கலந்து தெளிக்கலாம். ப்ளீச்சிங் பவுடர் இருப்பின் அதனையும் அவ்வாறு பயன்படுத்தலாம்.