Categories
பல்சுவை

வெளிய போய்ட்டு வாரீங்களா…? ஆடையில் கூட கவனம்…. உஷார்….!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ,

வீட்டினுள் வெயில் படக்கூடிய நேரங்களில் கதவு ஜன்னல்களை திறந்து வைத்து மூடவும். ஒவ்வொருவரும் தனித்தனி உணவு தட்டுக்கள், குவலைகள் பயன்படுத்துவது நல்லது. தவிர்க்க முடியாத சூழலில் வெளியே சென்று வரும்போது, வீட்டின் வெளியிலேயே கை கால்களை நன்கு கழுவிய பின் எவரையும் எந்த பொருளையும் நீங்களோ அல்லது உங்கள் உடையோ பட்டுவிடமால், குளியலறைக்கு சென்று உங்களது ஆடைகளை கிருமிநாசினி கலந்த சோப்புக் கரைசலில் அலசுங்கள். இது நோய்க் கிருமிகளை அண்டவிடாமல் தடுக்கும். வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் நோய் பரவாமல் பாதுகாக்க முடிந்த அளவிற்கு சிறிது காலத்திற்கு உங்களை நீங்களே வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |