தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு உழைக்க வந்த உழைப்பாளிகளே, விருந்தினர்களை உங்களுக்காக கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் செய்துள்ள வசதிகளை அறிந்து கொள்க,
- நீங்கள் குடியிருக்கும் வீட்டின் அல்லது கட்டிடத்தின் உரிமையாளர் உங்களை வெளியேற்ற முயற்சி செய்தால் உள்ளூர் பஞ்சாயத்தில் முனிசிபாலிட்டி புகார் தெரிவிக்கலாம். அவர்களால் இப்போதைய சூழ்நிலையில் வெளியேற்ற முடியாது.
- உணவு பெறுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால் உங்கள் உள்ளூர் பஞ்சாயத்தில் மக்கள் உணவகங்கள் மூலம் 20 ரூபாய்க்கு உணவு தயார் செய்து தரப்படுகிறது. இதற்கு உங்கள் லோக்கல் கவுன்சிலரை தொடர்பு கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்வார்.
- அதே போல் உணவு வாங்க பணம் இல்லை என்றாலும் உங்களது லோக்கல் கவுன்சிலரை தொடர்பு கொள்ளுங்கள் அவர்கள் உணவை அல்லது உணவுப் பொருட்களை இலவசமாக பெற்று தருவார்கள் என்று கேரளா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.