பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஒவ்வோரு பாஜகவினரும் ரூ. 100 வழங்குமாறு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது இந்த வைரஸில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், அரசுக்கு உதவ நாட்டு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளியுங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். பிரதமரின் அந்தக் கோரிக்கையை ஏற்று பெரிய பெரிய நிறுவனங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் கொரோனா பாதிப்பிற்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு குறைந்தபட்சம் ரூ.100 நன்கொடை அளித்து உதவ வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#WATCH Delhi: Bharatiya Janata Party (BJP) National President Jagat Prakash Nadda requests party workers to contribute Rs 100 each to #PMCARES fund. pic.twitter.com/MaQJjpmz4L
— ANI (@ANI) March 30, 2020