மீனம் ராசி அன்பர்களே..! இன்று தோல்வியே வெற்றிக்கு முதல் படி, எனவே தோல்வியை கண்டு துவளாதீர். முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். நியாயத்தை மற்றவரிடம் தயவு செய்து தெரிவியுங்கள், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை கொஞ்சம் இருக்கும். புதிய முயற்சிகளை தயவுசெய்து தள்ளிப் போடுங்கள்.
காரியத்தில் அனுகூலமும் ஏற்படுவதற்கு இறைவழிபாட்டை நீங்கள் மேற்கொள்வது ரொம்ப நல்லது. உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை நீங்கள் கவர்வீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை கிடைப்பது கொஞ்சம் கடினம் தான், பார்த்துக்கொள்ளுங்கள். பணவரவை பொருத்த வரை பிரச்சனை இல்லை. கொடுக்கல் வாங்கலிலும் ஓரளவு பிரச்சனைகள் தீரும். நீண்ட நாட்களாக இருந்த கஷ்டங்களும் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியமும் ஆற்றலும் ஏற்படும். காதலில் பயப்பட கூடிய சூழலும் அமையும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது, உங்களுக்கு அது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இல்லத்தில் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: அது பச்சை மற்றும் இளம் நீல நிறம்