Categories
தேசிய செய்திகள்

மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா உறுதி… மசூதியை சுற்றிவளைத்த டெல்லி போலீஸ்: 300 பேருக்கு பரிசோதனை

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றை சுற்றி வளைத்து டெல்லி போலீஸ். இந்த மசூதியில் மதக்கூட்டம் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து அப்பகுதியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து சுமார் 1500 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் 1,500 பேரில் 981 நபர்களின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மீதமுள்ள நபர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் தமிழக சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மசூதியை சுற்றி வளைத்த போலீசார், அங்கிருந்த 300க்கும் மேற்பட்டோரை பரிசோதனைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் பங்கேற்ற நபர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பாதிப்புகள் பெரும்பாலும் டெல்லி நிஜாமுதீன் மசூதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்குத்தான் என தற்போது தெரியவந்துள்ளது. தற்போது இந்த பகுதி சீல் வைக்கப்பட்டு போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் பலர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 ஆக உள்ளது. அதில் இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |