Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்: கேரளாவில் 2ஆவது உயிரிழப்பு …!!

கேரளாவில் கொரோனா பாதித்த 68 வயது முதியவர் உயிரிழந்ததால் அம்மாநிலத்தில் உயிரிழப்பு 2ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதித்த மாநிலம் கேரளா. அங்கு  மட்டும் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதில் ஒருவர் உயிரிழந்து, 19 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். 68 வயதான இவருக்கு சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவர் கடந்த 5 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்வென்ட்டிலேட்டரால் கண்காணிக்கப்பட்டு வந்திருந்தார். இவரின் உயிரிழப்பை திருவனந்தபுரம் மருத்துவ நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

Categories

Tech |