Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா : 12 மாவட்டம்…. 1.08 லட்சம் வீடுகள்… 3.96 லட்சம் பேரிடம் ஆய்வு ..!!

தமிழகத்தில் சுமார் 4 லட்சம் பேரிடம் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வு நடத்தப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 67 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 6 பேர் குணமடைந்து இருக்கிறார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இந்நிலையில் காய்ச்சல், சளி, சுவாசக் கோளாறு இருக்கிறதா என 12 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று 3 லட்சத்து 96 ஆயிரத்து 147 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 3 பேர் பலி; இந்தியாவில் ...

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களை கொண்ட மாவட்டங்களில், அவர்கள் வசித்த வீட்டை சுற்றி 7 கிலோ மீட்டருக்குள் உள்ள 1,08,677 வீடுகளில் 2271 கள பணியாளர்களை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும், சென்னை, மதுரை, நெல்லை, ஈரோடு, சேலம், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வீடுவீடாக ஆய்வு நடத்தப்படுகின்றது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |