கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டுத்தீ போல மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில் சானிடைசர்கள், முகக்கவசங்கள் மக்களுக்கு தேவைப்படும் முக்கிய பொருளாக இருக்கிறது. இதனால் முகக்கவங்கள் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பதுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கர்நாடக மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முகக்கவசங்கள் பதுக்கப்படுவதாகத் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நிகழ்விடத்திற்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 12,000 போலி N95 முகக்கவசங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
N95 முகக்கவசங்கள் என்பது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் பயன்படுத்தும் உயர் ரக கவசங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.