Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74ஆக உயர்வு …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஏற்கனவே 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்துள்ளனர். இதில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது. 2 பேர் திருவண்ணாமலை  மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், டெல்லி  சென்று திரும்பிய 3 பேருக்கு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 2 ஆண்களுக்கு  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |