Categories
தேசிய செய்திகள்

ஏப்.1ம் தேதி சென்னை – டெல்லி பார்சல் விரைவு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு!

சென்னையில் இருந்து டெல்லிக்கு பார்சல் விரைவு ரயில் ஏப்.1 மற்றும் 8ம் தேதிகளில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைத்து பயணிகள் ரயிலையும் ரத்து செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில்வே பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றித் தர இந்திய ரயில்வே முன்வந்துள்ளது.

பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து டெல்லிக்கு பார்சல் விரைவு ரயில் ஏப்.1 மற்றும் 8ம் தேதிகளில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை மாலை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சரக்கு ரயில் 3ம் தேதி காலை 9 மணிக்கு டெல்லி சென்றடையும், மற்றொரு ரயில் 8ம் தேதி புறப்படும். சரக்கு ரயில் ஏப்ரல்.10ம் தேதி காலை 9.30 மணிக்கு டெல்லி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.

Categories

Tech |