தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் சென்று திரும்பிய 43 வயது நபருக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. டெல்லி சென்று திரும்பிய 5 பேரில் 3 பேருக்கு விழுப்புரத்திலும், 2 பேருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் மூச்சுத் திணறல் உள்ளதா என பரிசோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இதுவரை 1,08,677 வீடுகளில் 3,96,147 நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை கூறியுள்ளது. சென்னை, மதுரை, நெல்லை, ஈரோடு, சேலம் உள்பட 12 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் மூச்சுத் திணறல் உள்ளதா என பரிசோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.