Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லி சென்று தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா உறுதி …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக இருந்ததில் 6 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது.

இதில் திருவனந்தபுரம் சென்று திரும்பிய 43 வயது நபர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே போல டெல்லி சென்று திரும்பிய விழுப்புரம், மதுரையை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே கொரோனா பாதித்த திருவண்ணாமலை நபருடன் தொடர்பில் இருந்தவருக்கும் கொரோனா

புதிதாக கொரோனா பாதித்த 7 பேரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 5 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |