Categories
பல்சுவை

“கொரோனாவால்” உறவுகளுக்குள் சண்டையா…..? இத FOLLOW பண்ணுங்க…..!!

குடும்பத்தினருடன், நண்பர்களுடன், காதலன், காதலியுடன் சண்டை ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். 

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடே 21 நாட்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான வீடுகளில், மனஉளைச்சலால்  கணவன், மனைவி குடும்பத்தாரோடு கடுமையான சண்டை என்பது நிலவிவருகிறது. பொதுவாக சண்டைகள் எப்படி உருவாகிறது என்று உற்று நோக்கினால், குடும்பத்திலுள்ள ஒரு நபரிடம் குறை கண்டு அந்த குறையை கூறி திட்டுவதில்  ஆரம்பித்து சண்டை விஸ்வரூபம் எடுக்கிறது.

உதாரணமாக ஒரு கதை ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தவறு செய்பவர்களுக்கு ஒரு வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டு வந்தது. உதாரணமாக ஒருவன் திருடுகிறான் என்றால் அவனை பிடித்து கிராமத்தின் மையத்தில் மக்கள் கூடும் இடத்தில் நிற்க வைத்து அங்கே பொது மக்களைக் கூட்டி அவனுக்கு ஒரு தண்டனை கொடுப்பார்கள். அது என்னவென்றால், அவனுடன் அதே கிராமத்தில் உள்ளவர்கள் ஏற்கனவே பழகி இருப்பார்கள்.

அவர்களை முதலில் முன்னே விட்டு ஒவ்வொருவரும் அவனிடம் இருக்கக்கூடிய பாசிட்டிவ் எண்ணங்களை செயல்களை நினைவுபடுத்துவர் . அவன் என்றேனும் ஒருநாள் ஒரு நல்ல விஷயத்தை செய்திருப்பான். அதை நினைவு கூறி அவனை பாராட்டி விட்டு செல்வர். இதை முழுவதையும் கேட்டுவிட்டு அவனுக்குள்  ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படும். இத்தனை நல்ல செயல்கள் செய்த நாம் இந்த திருட்டு செயலில் ஈடுபட்டுவிட்டோமா ? என்று நினைத்து அவன் திருந்தி விடுவான்.

இன்றளவும் ஆப்பிரிக்காவில் உள்ள அந்த கிராமம் இதனை பின் தொடர்ந்து வருகிறது என்பது கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையா? பொய்யா ? என்று யோசித்துப் பார்க்கும் முன் ஒரு முறை யோசிப்போம். நம் வீட்டில் இருக்கும் நபர் தவறு செய்து விட்டதாக வைத்து கொள்வோம். ஒரு நிமிடம் கோவப்படுவதற்கு முன், குறை கூறுவதையும் விட்டுவிட்டு அவரிடம் இருக்கக்கூடிய நல்ல விஷயங்கள், நல்ல பழக்கங்கள், நல்ல செயல்கள் அல்லது ஒரு நாள் அவர்கள் நமக்கு நினைத்துப் பார்க்கக் கூட முடியாத உதவிகளை செய்திருப்பார்.

பெரிய கஷ்டங்கள் இருக்கும் போது நம்முடன் இருந்திருப்பார். அதை எல்லாம் அவர் தவறு செய்யும்போது எடுத்துக்கூறி பாசிட்டிவான எண்ணங்களை அவருக்கும் தோற்றுவித்தால்  அவரும் செய்த தவறை உணர்ந்து திருந்துவார். வீட்டிலும் சண்டை வராது. இதை நன்றாகப் படித்து உங்களது வீடுகளிலும் இதை பின்பற்றுங்கள். குடும்பத்தினருடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழியுங்கள். சண்டை வேண்டாம், இக்கால கட்டத்தில் உடலால் தனித்து மனதால் ஒருங்கிணைந்து செயல்பட கூடிய நேரம். இந்நேரத்தில் மனதால் சண்டையிட்டு பேசாமல் இருப்பது மேலும் மன உளைச்சலைத் தரும் என்பதை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும்.

Categories

Tech |