Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” வைத்தியம் பார்க்க செவிலியர் ரோபோ….. ராஜஸ்தான் மாநிலத்தில் அறிமுகம்….!!

கொரோனா நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க  ரோபோ ஒன்று புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தற்போது உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரிக்க மக்கள் 21 நாள்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள், செவிலியர்கள்  ஆகியோர் தங்களது வேலையை திறம்பட செய்து வருகின்றனர். அதிலும் மருத்துவர்களை விட செவிலியர்கள் அதிகநேரம் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை அவர்களுடனே இருந்து சேவையாக உலகம் முழுவதும் செய்து வருகின்றனர்.

தனால் அவர்களுக்கும் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலான இடங்களில் தங்களுடைய குடும்பத்தினரிடையே நேரம் செலவழிக்க முடியாத சூழ்நிலை பல செவிலியர்களுக்கு ஏற்பட்டுள்ளது வேதனையை நமக்கு அளித்தாலும்,  அதனை வேதனையாக கருதாமல் தங்கள் சேவையாக கருதி வேலையை செய்கின்றனர். இந்நிலையில் நோயாளிகள் உடனே தொடர்ந்து சேவையில் 24 மணி நேரமும் செயல்படவும், அதே சமயம் நோய் தொற்று வராமல் இருப்பதற்கும்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல எஸ்எம்எஸ் மருத்துவமனையில் செவிலியர் பணியை செய்வதற்கு ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சேவை செய்து வருகிறது. இதை மருத்துவ நிர்வாகம் ஆவண படமாக எடுத்து தயார் செய்து தற்போது அரசாங்கத்திடம் சமர்ப்பித்து உள்ளனர். அதில் இந்த ரோபோ எந்த குறையும் இல்லாமல் நோயாளிகளுக்கு சேவை செய்துள்ளது. அதே சமயத்தில் தேவையற்ற வகையில் பரவும் நோய் தொற்றை இது  தடுத்து உள்ளது. இதனால் செவிலியர்கள் பாதிக்கப்படுவது வெகுவாக குறையும் என்று தெரிவித்துள்ளனர். 

Categories

Tech |