Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

எடை அதிகரிக்க…. சுவை மிகுந்த…. வாழைப்பழ சப்பாத்தி….!!

குழந்தைகளின் எடையை அதிகரிக்க கூடிய பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழ சப்பாத்தி செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காண்போம்.

வாழைப்பழத்தை துண்டுதுண்டாக நறுக்கி அதனுடன் சர்க்கரை அல்லது வெல்லம் ஏதேனும் ஒரு இனிப்பு பொருளைச் சேர்த்து நன்றாக பிசைந்த பின் மிக்ஸியில் அடித்து வாழைப்பழ கூழாக மாற்ற வேண்டும்.

அதன்பின் அந்தக் கூழை கோதுமை மாவில் விட்டு சிறிது நீர் சேர்த்து உருண்டையாக திரட்டி பின் சிறு சிறு உருண்டையாக பிடித்தவைகளை சப்பாத்தி கட்டையால் தேய்த்து பின் தவாவில் வேகவிட்டு எடுக்கவும். இதில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்தால் சுவை மிக கூடுதலாக இருக்கும். இந்த வாழைப்பழ சப்பாத்தியில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு எடை கூட்டுவதில்  முக்கிய பங்கு வகிக்கிறது

Categories

Tech |