ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தூரிதப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே புதிய மருத்துவர்கள், புதிய செவிலியர்கள், புதிய மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அதிரடி காட்டியுள்ளது தமிழக அரசு வழங்கி.
ஒப்பந்த முறையில் மேலும் இரண்டு மாதங்கள் தற்காலிக நியமனம் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இன்று அந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதில் 31.3.2020 ( இன்றுடன் ஓய்வுபெற உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் தொழில் நுட்ப பணியாளர்கள்) அனைவருக்கும் ஒப்பந்த முறையில் மேலும் இரண்டு மாதங்கள் பணி தொடர தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.