வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஜூன் மாதத்திற்குள் நாற்பதாயிரம் செயற்கை வெண்டிலெட்டர்களை தயார் செய்து தர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது தொழிற்சாலைகளில் கட்டாயமாக வென்டிலேட்டர் களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி,
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுக்குள் கொண்டுவருவது சிரமமாக இருக்கிறது. ஆகவே முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பெட்டிகள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன தற்போதைய சூழ்நிலையில் வெண்டிலட்டர் களுக்கு மட்டுமே இந்தியாவில் கொரோனா தட்டுப்பாடு என்பது ஏற்பட்டு உள்ளது. ஆகையால் வாகனம் தயாரிக்கும் அனைத்து தொழிற்சாலைகளும் ஜூன் மாதத்திற்குள் 40,000 வெண்டிலேட்டார்களை கட்டாயமாக தயாரித்து மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.